என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்லைன் மருந்து விற்பனை"
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் தில்லை மெடிக்கல் மனோகரன் தலைமை தாங்கினார்.
திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் கிருபானந்த மூர்த்தி, செயலாளர் சொக்கலிங்கம், பொருளாளர் சின்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மருத்துவர் பரிந்து ரையின் மட்டுமே தற்போது மருந்துகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் முறை நடைமுறைபடுத்தப்பட்டால் தவறான மருந்துகள் எளிதில் வாங்க முடியும். இதனால் இளைய தலைமுறையினர் வாழ்க்கை சீரழியும் நிலை உருவாகும்.
ஆன்லைன் மருந்து விற்பனை பாதிக்கும் உருவாகும் பட்சத்தில் சிறிய கிராமங்கள் மற்றும் சிறிய அளவிலான நகரங்களில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகி விடும். போலி மருந்துகள் நடமாட்டம் மற்றும் தரம் குறைந்த மருந்துகள் நடமாட்டமும் இதனால் அதிகரிக்கும். ஊக்க மருந்துகள், கருத்தடை மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் வலிநிவாரணி மருந்துகளை இளைஞர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதோடு, கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும்.
இந்த தொழிலை நம்பி 8 லட்சம் உறுப்பினர்கள் நேரடியாகவும், 40 லட்சம் பேர் மறைமுகமாகவும் மற்றும் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும் மருந்து ஆளிநர்களுக்கான பட்டயப்படிப்புகளை படித்து கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருச்சி மாவட்ட மொத்த மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் கூறுகையில், ஆன்லைன் மூலம் பிற பொருட்களை வாங்குவதில் எந்த பிரச்சினைகளும் இல்லை. மருந்துகளை ஆன்லைனில் வினியோகம் செய்வதால் எவ்விதமான மருந்துகளை யார் வேண்டுமானாலும் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். தவறான மருந்துகளை வாங்கி இளைய சமுதாயம் சீரழியும் சூழ்நிலை உருவாகும். இதை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்க புரவலர் பெரியசாமி, ஸ்ரீரங்கம் மண்டல தலைவர் சரவணன் உள்ளிட்ட 200&க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசா மணியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. #tamilnews
சென்னை:
ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதை தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, ‘ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், ‘ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குப்படுத்தும் விதிமுறைகள் மத்திய அரசு வகுப்பதாக கூறுவதால், அவ்வாறு விதிமுறை உருவாக்கி, அரசிதழில் வெளியான பின்னர், உரிய உரிமத்தை ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் பெறவேண்டும். அதுவரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யக்கூடாது’ என்று கடந்த 17-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர், இடைக்கால மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில், இடைக்கால மனு மீதான தீர்ப்பை இன்று நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், ‘ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவுக்கு, இடைக்கால தடை பிறப்பிக்கின்றோம். இந்த பிரதான வழக்கு விசாரணையை அடுத்த வாரத்தில் விசாரிக்கப்படும்’ என்று கூறியுள்ளனர். #HighCourt #OnlineMedicineSale
வீட்டு வாசலுக்கு வந்து கொடுக்கப்படுவதால், ஆன்-லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது.
இதனால், தனியார் நிறுவனங்கள் ஆன்-லைன் வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. செல்போன், ஆடைகள், காலணிகள், மளிகை சாமான்கள் மட்டுமல்லாமல், இட்லி தோசையும் ஆன்-லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில், இப்போது மருந்து, மாத்திரைகளும் விற்பனைக்கு வந்து விட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை தனியார் நிறுவனங்கள் பல விற்பனை செய்கின்றன. இதை அனுமதித்தால், போலியான, காலாவதியான மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து விடுவர். இது பொதுமக்களுக்கு மிகப்பெரிய தீங்கு ஏற்படுத்தும்.
ஆன்லைன் மூலம் மருந்துக்களை விற்பனை செய்ய சட்டப்படியாக உரிமம் எதுவும் பெறாமலேயே பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.
டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து, மாத்திரை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே, ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் மாசிலாமணி, ‘டாக்டரின் பரிந்துரை இல்லாமல், அதாவது டாக்டர் தரும் மருந்து சீட்டு இல்லாமல், எந்த ஒரு மாத்திரை, மருந்துகளும் கொடுக்கக்கூடாது என்று மருத்துவ கவுன்சில் விதி உள்ளது. அப்படியிருக்கும் போது, சாதாரண பொருட்களை வாங்குவது போல, எப்படி மருந்தை பொது மக்கள் வாங்க முடியும்? அந்த மருந்து விற்பனையை தனியார் நிறுவனங்கள் எப்படி மேற்கொள்ள முடியும்? அதுமட்டுமல்ல, மருந்து விற்பனை செய்வதற்கும் முறையான உரிமம் வாங்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்-லைன் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிட்டனர். டாக்டர்கள் தரும் மருந்து சீட்டை, ஸ்கேன் செய்து ஆன்-லைனில் அனுப்பி மருந்துகளை பெறுகின்றனர். இந்த மருந்துகளை பரிந்துரை செய்ய டிஜிட்டல் ரைட்டிங்பேடும் டாக்டர்களிடம் உள்ளது என்று வாதிட்டனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஆன்-லைனில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கும் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னர், அந்த சட்ட வரைவு மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, சட்டமாக கொண்டு வரப்படும்’ என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 10-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார்.
ஆன்-லைனில் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ய முடியாது. ஆன்-லைன் மருந்து விற்பனை செய்ய அனுமதி வழங்குவதற்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சட்டத்தை மத்திய அரசு விரைவாக கொண்டு வர வேண்டும். ஜனவரி 31-ந்தேதிக்குள் சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் வரை ஆன்-லைனில் மருந்து விற்பனை செய்யக்கூடாது. ஆன்-லைனில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி கூறியுள்ளார். #HighCourt #OnlineMedicineSale
ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதை கண்டித்து அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் இன்று மருந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் மொத்த மற்றும் சில்லறை விற்பனை மருந்து கடைகள் உள்ளது. இவற்றில் பெரும்பாலான மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்பட்டு இருந்தது. மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படும் மருந்து கடைகள் இயங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 840 மருந்து கடைகள் உள்ளது. இவற்றில் 790 மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. அம்மா மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளுடன் இயங்கும் மருந்தகம் மட்டும் செயல்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையுடன் இயங்கும் மருந்தகங்கள் வழக்கம்போல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்